மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது
பேரையூர் அருகே மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
பேரையூர்,
பேரையூர் போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக எஸ்.மேலப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது அதே ஊரை சேர்ந்த விஜய் (வயது 27) என்பவர் விற்பனை செய்வதற்காக 15 மதுபாட்டில்கள் வைத்திருந்தபோது ரோந்து சென்ற போலீசார்அவரை கைது செய்து மதுபாட்டில்களையும், ரொக்கம் ரூ.1000-த்தையும் பறிமுதல் செய்தனர்.