ெரயிலில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
ெரயிலில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
சோழவந்தான்
சோழவந்தான் ெரயில் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக சோழவந்தான் கிராம நிர்வாக அலுவலர் சிவராமனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து மதுரை ெரயில்வே போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். இதன்பேரில் மதுரை ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன், ஆதார் அட்டை ஆகியவற்றை ெரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். இதில் தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்த முகமது ஜாபர் மகன் ரசாக்(வயது 48) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் ெரயிலில் தூங்கிக் கொண்டு இருந்த ரசாக் கீழே விழுந்ததில் ெரயிலில் அடிபட்டு இறந்து இருக்கலாம் எனவும், இறந்தவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் ேபாலீசார் தெரிவித்தனர்.