பெண்ணை அவதூறாக பேசியவர் கைது

பெண்ணை அவதூறாக பேசியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-13 20:14 GMT

முக்கூடல்:

பாப்பாக்குடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை இடைகால் மீனவர் காலனியைச் சேர்ந்த முருகன் (வயது 28) என்பவர் முன் விரோதம் காரணமாக அப்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவதூறாக பேசி விளக்கை உடைத்து சேதப்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கற்பகவிநாயகம் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்