பெண்ணை அவதூறாக பேசியவர் கைது
சிவகிரியில் பெண்ணை அவதூறாக பேசியவர் கைது செய்யப்பட்டார்.
சிவகிரி:
சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள கீழ மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் காந்தேஸ்வரன் (வயது 24). இவர் மதுபோதையில் இரவில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று கதவை தட்டி தொல்லை கொடுத்ததுடன் அந்த பெண்ைண அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காந்தேஸ்வரனை கைது செய்தனர்.