பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-28 19:30 GMT

கரூர் மாவட்டம், புதுகுறுக்குபாளையம் அருகே உள்ள கொங்குநகர் பகுதியைச் சேர்ந்தவர் திவாகர் (வயது 24). இவர் புகழூர் ெரயில்வே கேட் அருகே சாலையின் குறுக்கே நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி கொண்டிருந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் போலீசார் திவாகரை எச்சரிக்கை செய்தும் அவர் கேட்கவில்லை. இதையடுத்து திவாகர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்