தொழிலாளியை தாக்கியவர் கைது

முக்கூடலில் தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-22 21:21 GMT

முக்கூடல்:

முக்கூடல் ரஸ்தா காலனியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி (வயது 46). கூலி தொழிலாளி. மைலப்பபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் அந்தோணி சகாய பிரவீன் (29). இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்ற சுந்தரபாண்டியை அந்தோணி சகாய பிரவீன் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி சகாய பிரவீனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்