தொழிலாளியை தாக்கியவர் கைது

நெல்லையில் தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-12 19:38 GMT

நெல்லை சந்திப்பு தென்பத்து பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 52). கூலி தொழிலாளியான இவரை அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (53) என்பவர் முன்விரோதம் காரணமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முருகன் காயம் அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்