தொழிலாளியை தாக்கியவர் கைது

விழுப்புரம் அருகே தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-13 18:45 GMT

விழுப்புரம் அருகே உள்ள காணை பகுதியை சேர்ந்தவர்கள் வீரபுத்திரன்(வயது 56), கிருஷ்ணமூர்த்தி(45). இவர்கள் இருவரும் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வருகின்றனர். வீரபுத்திரனுக்கு திருமணமாகி குழந்தை இலலை. இந்நிலையில் காணை வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி, வீரபுத்திரனை பார்த்து உனக்குத்தான் குழந்தை இல்லையே, பணம் சம்பாதித்து என்ன செய்யப்போகிறாய் எனக்கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, வீரபுத்திரனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து வீரபுத்திரன் கொடுத்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு கிருஷ்ணமூர்த்தியை செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்