தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-23 19:13 GMT

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் அருகே உள்ள அரிகேசவநல்லூர் பணையடி தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45). தொழிலாளியான இவர் தனது வீட்டிற்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக சத்தமாக பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செண்டுகுமார் (32) என்பவர் தட்டிக்கேட்டு, அவதூறாக பேசி கம்பால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெருமாள் வீரவநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து, செண்டுகுமாரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்