மாற்றுத்திறனாளியை தாக்கியவர் கைது

மாற்றுத்திறனாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-30 18:45 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 44). மாற்றுத்திறனாளியான இவர் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஆயன்குளம் பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திசையன்விளை முத்துபேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தர்மராஜ் (30), அந்தோணிராஜிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பத்திரபாண்டி, தர்மராஜைக் கண்டித்தார். அப்போது ஆத்திரமடைந்த தர்மராஜ், பத்திரபாண்டியையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்