அம்பை:
கல்லிடைக்குறிச்சி பொன்மா நகர் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் காசிமணி (வயது 40). மாற்றுத்திறனாளி. இவர் கல்லிடைக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜ் அருகே சென்றபோது, தெற்கு பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த பிரம்மநாயகம் (36) என்பவர் மற்றொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அதனை காசிமணி தட்டி கேட்டு விட்டு சென்றார். பிரம்மநாயகம், காசிமணியை வழிமறித்து அவதூறாக பேசி அவருடைய ஊன்றுகோலை பிடுங்கி அடித்து, மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து காசிமணி கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் விசாரணை நடத்தி பிரம்மநாயகத்தை கைது செய்தார்.