தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது

விழுப்புரம் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகை, பணத்தை பறிமுதல்செய்தனர்

Update: 2022-09-17 18:45 GMT

விழுப்புரம்

வாகன சோதனை

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வீரன் கோவில் அருகே நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள், பரணிநாதன், பிரபு, சத்யா மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக வந்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். உடனே அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை செய்தனர்.

கைது

விசாரணையில் அவர், விழுப்புரம் சாலாமேடு என்.எஸ்.கே. நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோபிநாத் (வயது 40) என்பதும், இவர் கடந்த 18.2.2022, 22.7.2022 ஆகிய நாட்களில் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2 வீடுகளின் கதவை உடைத்து உள்ளே புகுந்து 20 கிராம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கோபிநாத்தை போலீசார கைது செய்து அவரிடமிருந்த 14 கிராம் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் கோபிநாத்தை போலீசார், விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்