வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2023-07-08 21:01 GMT


மதுரை கரிமேடு மோதிலால் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மகன் கண்ணன் (வயது 44). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர் மீது வழிப்பறி மற்றும் பெண்களை துன்புறுத்துதல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்