சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது
சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்
காளையார்கோவில்
காளையார்கோவில் அருகே உள்ள மருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜேசு அருள் (வயது 50). இவர் தனது வீட்டில்சாராயம் காய்ச்சுவதற்கான ஊறல் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் அழகர், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், போலீசார் பாலச்சந்தர், அந்தோணி, அய்யங்காளை மற்றும் ஸ்டாலின் ஆகியோர் நேற்று ஜேசு அருள் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவருடைய வீட்டில் 40 லிட்டர் ஊறல் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து ஜேசு அருளை கைது செய்தனர்.