வெள்ளகோவில்
வெள்ளகோவில் கச்சேரி வலசு பகுதியில் நேற்று பெண் மயில் ஒன்று மின்மாற்றில் மோதி செத்து கிடந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர் நாகராஜ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கால்நடை மருத்துவ அலுவலர் பகலவன் சம்பவ இடம் வந்து செத்து கிடந்த மயிலை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு கச்சேரி வலசு பகுதியிலேயே புதைத்தனர்.