தென்பெண்ணையாற்றில் மூழ்கி ஊராட்சி செயலாளர் பலி

மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்று தண்ணீரில் மூழ்கி ஊராட்சி செயலாளர் பரிதாபமாக இநந்தார்.

Update: 2022-09-20 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைபட்டு அருகே சவேரியார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் ஆரோக்கியதாஸ் (வயது 46). இவர் மேல்சிறுவள்ளூரில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். ஆரோக்கியதாஸ் நேற்று தனது நண்பர்களுடன் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆரோக்கியதாஸ் நீரில் மூழ்கினார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே மூங்கில்துறைப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி ஆரோக்கியதாசை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் விசாரணை

இதில் ஆரோக்கியதாசை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்