பஞ்சாயத்து அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகை

நெல்லை அருகே சுத்தமல்லி பஞ்சாயத்து அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகையிட்டனர்.

Update: 2022-08-22 19:39 GMT

பேட்டை:

சுத்தமல்லி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வ.உ.சி நகர் பகுதியில் சாலை, தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சுத்தமல்லி பகுதி தலைவர் ஷேக் முகமது பயாஸ் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பேட்டை முஸ்தபா கலந்து கொண்டு பேசினார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் மானூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் என்றார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்