சாதி பெயரை சொல்லி திட்டியதாக ஊராட்சி மன்ற பெண் தலைவர் புகார்

சாதி பெயரை சொல்லி திட்டியதாக ஊராட்சி மன்ற பெண் தலைவர் புகார் அளித்துள்ளார்.

Update: 2022-10-03 16:45 GMT

கந்திலி ஒன்றியம் காக்கங்கரை ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி, பொதுமக்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனிடம் நேரில் மனு அளித்தார். அதில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் சரவணன் மற்றும் அவரது தம்பி சுரேஷ்குமார் என்னை பட்டியலின சாதி பெயரை சொல்லி, தகாத வார்த்தையில் திட்டினார்கள். மேலும் பொதுப்பிரிவின் கீழ் நின்று ஒரு ஆதிதிராவிடர் வெற்றி பெற்றார் என்பதால் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னை தரக்குறைவான வார்த்தையால் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து வருகிறார். நான் ஒரு வக்கீல், நீ எப்படி இந்த ஊராட்சியில் 5 வருடம் பணி செய்வாய் என்று பார்த்துக் கொள்கிறேன் என்றும் மிரட்டுகிறார்.

எனவே சரவணன் மற்றும் சுரேஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் மற்றும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதே போன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்