விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பலி
அம்பையில் நடந்த விபத்தி்ல் ஓட்டல் உரிமையாளர் பலியானார்.
அம்பை:
அம்பையில் ஓட்டல் நடத்தி வருபவர் பீர்முகம்மது ஹக்கீம் (வயது 35). இவர் நேற்று தனது நண்பர்களான மேல புதுத்தெருவை சேர்ந்த சகோதரர்கள் சிவா (29), கோபி (24) மற்றும் ராஜேஷ் (28) ஆகியோருடன் காரில் வந்தார். காரை சிவா ஓட்டி வந்தார்.
அப்போது கார் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த பீர்முகம்மது ஹக்கீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் அம்பை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சிவா, கோபி, ராஜேஷ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.