போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய அபராதம் விதிக்கப்படும்
போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய அபராதம் விதிக்கப்படும்
சீர்காழி நகரசபை தலைவர் துர்க்கா ராஜசேகரன் கூறியதாவது:- சீர்காழி நகர் பகுதியில் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களுடைய கால்நடைகளை தொழுவத்தில் கட்டி பராமரிக்க வேண்டும். மாறாக போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரியவிட்டால், சீர்காழி நகராட்சி சார்பில் போலீஸ் துறை உதவியோடு, கால்நடைகளை பிடித்து மயிலாடுதுறை கோசாலையில் விடப்படும். மேலும் கால்நடைகளின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய அபராதம் விதிக்கப்படும் என்றார்.