பேன்சி ஸ்டோர் உரிமையாளர் தற்கொலை

கல்லாவியில் பேன்சி ஸ்டோர் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-03 17:24 GMT

ஊத்தங்கரை

ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அண்ணா சாலையை சேர்ந்தவர் பிரவீன்ராவ் (வயது 31). இவர் அந்த பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்து இருந்தார். நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்