நிலுவையில் உள்ள மானியத் தொகையை வழங்க வேண்டும்

சத்துணவு மையங்களுக்கு நிலுவையில் உள்ள மானியத் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-15 12:05 GMT

தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர்கள் பேரவை மாநில மைய நிர்வாகக் குழு கூட்டம் திருப்பத்தூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். சாதுல்லா, காளியப்பன், கீதா, தமிழரசி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். ஆறுமுகம், கோவிந்தசாமி, சிவாஜி, மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் சத்துணவு மையங்களுக்கு உணவு தயாரிப்புக்கான உணவூட்டு செலவினத்தொகைக்கான மானியம் ஒருவருடமாக வழங்கவில்லை. இதனால் சத்துணவு மைய பொறுப்பாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு உணவு தயாரித்து வழங்குகின்றனர். எனவே மானியத்தொகையினை உடனே வழங்கி தங்கு தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒய்வுபெறும் சத்துணவு பணியாளர்களுக்கு ஒட்டுமொத்தை தொகையினை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சத்துணவு பணியாளர்களை முழநேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். காலை உணவு திட்டத்தில் சத்துணவு பணியாளர்கள் உணவு தயாரித்து வழங்க உத்தரவிட்டு, முழுநேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். மேலும் சத்துணவு பணியாளர்களுக்கு ஒய்வூதியதொகை மாதம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் மாநில மகளிரணி செயலாளர் தமிழரசி நன்றி கூறினார்,

Tags:    

மேலும் செய்திகள்