கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் திறப்பு
கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ.25½ லட்சம் காணிக்கை வசூலானது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் பழனியம்மாள், ஆய்வர் லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலையில், காணிக்கை எண்ணும் பணியில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில், 25 லட்சத்து 27 ஆயிரத்து 225 ரூபாய், 12 கிராம் 500 மில்லி தங்கம், 1 கிலோ 380 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.