முட்புதருக்குள் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

காட்டு யானை துரத்திய போது முட்புதருக்குள் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

Update: 2022-06-27 14:54 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே தேவாலா அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.2 பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 67), கூலித்தொழிலாளி. கடந்த 21-ந் தேதி முனுசாமி வீட்டில் இருந்து வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் நின்ற காட்டு யானை திடீரென அவரை தாக்க முயன்றது. மேலும் யானை துரத்தியதால், முனுசாமி ஓட்டம் பிடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முட்புதருக்குள் அவர் தவறி விழுந்தார். முனுசாமியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் காட்டு யானையை விரட்டினர். தொடர்ந்து முட்புதருக்குள் விழுந்ததில் படுகாயம் அடைந்த முனுசாமியை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி முனுசாமி இறந்தார். இதுகுறித்து தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முனுசாமியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு வனச்சரகர் அய்யனார் உரிய சான்றுடன் விண்ணப்பித்தால் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்