தீக்குளித்த மூதாட்டி சாவு

பெரியகுளத்தில் தீக்குளித்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-25 18:45 GMT

பெரியகுளம் வடக்கு பாரஸ்ட் ரோட்டை சேர்ந்தவர் வசந்த ராணி (வயது 65). சம்பவத்தன்று இவர், தனது சேலையில் தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் வலியால் அவர் அலறி துடித்தார். பின்னர் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடகரை கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்