தவறி விழுந்த மூதாட்டி தலையில் அடிபட்டு சாவு

பட்டுக்ேகாட்டையில் தவறி விழுந்த மூதாட்டி தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.

Update: 2023-08-11 20:00 GMT

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி புஷ்பவல்லி(வயது 75). இவர் சம்பவத்தன்று வீட்டு அருகில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் சென்றபோது தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டது. அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்