பழமையான மரம் முறிந்து விழுந்தது

ஓட்டப்பிடாரம் பகுதியில் மழைக்கு பழமையான மரம் முறிந்து விழுந்தது.

Update: 2023-05-30 19:00 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடராம் பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தெற்கு ஆரைக்குளம் பகுதியில் பெய்த கன மழையில் ஊருக்கு கிழக்கு உள்ள 400 ஆண்டு பழமையான ஆலமரம் பாதியாக முறிந்து சாய்ந்தது. இந்த மரம் விழுந்ததில் அருகில் இருந்த மின்கம்பம்கள் உடைந்ததால், அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது. மேலும் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் மின்சார துறையினர் ஆலமரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்