பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-12-01 15:31 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளை பேரவை கூட்டம் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் பேரவை கூட்டம் நடைபெற்றது. வட்டக்கிளை தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் அண்ணாமலை கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த சக்திவேல், பிரகாஷ், ரவீந்திரநாதன், செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

கூட்டத்தில் ஜவ்வாதுமலையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும். ஜவ்வாதுமலை வட்டத்தில் மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் புளி, தேன் மற்றும் தானிய வகைகள் விற்க விற்பனை சந்தை அமைக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை நீக்கி பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் அன்பழகன், ராதாகிருஷ்ணன், ஸ்ரீதர், உமா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்