முதியவரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது

விளாத்திகுளம் அருகே முதியவரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-30 11:47 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தவசி (வயது 68). இவரது உறவினர் மாரிமுத்து (53). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலையில் தங்களது இடத்தில் உள்ள கருவேல மரங்களை வெட்டுவது குறித்து பேசி கொண்டிருந்துள்ளனர். இதில் திடீரென்று இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது

அப்போது அருகில் இருந்த கம்பியை எடுத்து தவசியை மாரிமுத்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தவசி விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்