காட்டெருமை முட்டி முதியவர் பலி

காட்டெருமை முட்டி முதியவர் பலி

Update: 2023-01-18 19:00 GMT


பெரும்பாறை அருகே உள்ள பள்ளத்துக்கால்வாய் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள காபி தோட்டத்துக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள புதருக்குள் இருந்து பாய்ந்து வந்த காட்டெருமை ஒன்று, தங்கவேலை முட்டி தள்ளியது. இதில், கீழே விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கவேல் உயிரிழந்தார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்