முதியவர் கைது
முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பதிவு பரப்பிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் முனியசாமி நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 67). இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், தி.மு.க குறித்தும் அவதூறு செய்திகளை பதிவிட்டு வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தி.மு.க.வை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் இரவு நாகராஜனை கைது செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு வந்து நாகராஜனிடம் நேரில் விசாரணை நடத்தினார்.