முதியவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

வேலூர் தெற்கு போலீஸ் நிலைய வளாகத்தில் முதியவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-08 11:54 GMT

வேலூர் ஓல்டுடவுன் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 63), லாரி டிரைவர். இவர் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது திடீரென அவர் மறைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த அருகில் இருந்த போலீசார் உடனடியாக ஓடிச் சென்று மண்எண்ணெய் பாட்டிலை தட்டிவிட்டனர். பின்னர் அருகில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து அவர் மீது ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தேவேந்திரனுக்கு சொத்து பிரச்சினை உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தனது மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்