ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே காவலாகுறிச்சி மருதுபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சூசையப்பன் (வயது 70). இவர் நேற்று முன்தினம் ஊத்துமலை செல்வதற்காக காவலாகுறிச்சி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக உக்கிரன்கோட்டையைச் சேர்ந்த பரமேஸ்வரன் மகன் ஆதிகேசவன் (24) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சூசையப்பன் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சூசையப்பனை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.