விளக்கு தீ சேலையில் பிடித்து மூதாட்டி சாவு
விளக்கு தீ சேலையில் பிடித்து மூதாட்டி கருகி இறந்தார்.
மலைக்கோட்டை, செப்.10-
திருச்சி பெரியகடைவீதி, சந்து கடை மாப்பிள்ளை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி வசந்தா (வயது 72). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டார். அப்போது, விளக்கில் உள்ள தீ வசந்தாவின் சேலையில் பிடித்தது. இந்த தீ அவரது உடல் முழுவதும் பரவியது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் சாமி கும்பிட சென்ற மூதாட்டி தீயில் கருகி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.