வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

வருமான வரிசெலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என வருமான வரித்துறை இணை ஆணையர் மதுசூதனன் கூறினார்.

Update: 2023-06-15 19:34 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

வருமான வரிசெலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என வருமான வரித்துறை இணை ஆணையர் மதுசூதனன் கூறினார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் ஆடிட்டர்கள் சங்கம் இணைந்து வியாபாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். ஆடிட்டர் அப்துல் நாசர் வரவேற்றார். அனைத்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டனர். வருமான வரியை சமர்ப்பிப்பது குறித்தும் அதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் வியாபாரிகள் கேட்டறிந்தனர்.

எண்ணிக்கை உயர்வு

இதற்கு வருமான வரித்துறை இணை ஆணையர் மதுசூதனன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் தற்போது வருமான வரிசெலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் வியாபாரிகளும் தற்போது வருமான வரி செலுத்துவதிலும் தங்களது வியாபாரத்தை பெருக்கும் வகையிலும் நேர்மையாக செயல்பட்டு வருவது மிகவும் பாராட்டத்தக்கது.

வங்கிகளில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை இணைத்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்த காலக்கெடுவுக்குள் இணைத்துக் கொள்ளுங்கள். தவறும் பட்சத்தில் தங்களது வங்கி கணக்குகள் நிறுத்தி வைக்கப்படும். ஆதலால் இதன் மூலம் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க வேண்டும். வருமான வரித்துறை உங்களுக்கு எந்த நேரத்திலும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்