மன்னார்குடி : ருக்மணி குளத்தின் கரையில் புதிதாக பதிக்கப்பட்ட சிமெண்டு கற்கள் சரிந்து விழுந்தது - அதிகாரிகள் ஆய்வு

மன்னார்குடியில் தொடர் மழையால் ருக்மணி குளத்தின் கரையில் புதிதாக பதிக்கப்பட்ட சிமெண்டு கற்கள் சரிந்து விழுந்தது.

Update: 2022-12-08 18:45 GMT

கோட்டூர்:

மன்னார்குடியில் தொடர் மழையால் ருக்மணி குளத்தின் கரையில் புதிதாக பதிக்கப்பட்ட சிமெண்டு கற்கள் சரிந்து விழுந்தது.

ருக்மணி குளம்

மன்னார்குடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அண்ணாமலை நாதர் கோவில் குளம், செங்குளம், தாமரைக்குளம் ருக்மணி குளம் உள்ளிட்ட நான்கு குளங்களின் கரைகள் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரூ.1 கோடியே 24 லட்சம் மதிப்பில் ருக்மணி குளக்கரையின் நான்கு புறமும் கரைகள் மேம்படுத்தப்பட்டு, கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சிமெண்டு கற்கள் சரிந்தது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மன்னார்குடி பகுதியில் பெய்த மழையால் ருக்மணி குளத்தின் கீழ்கரையில் பதிக்கப்பட்டு இருந்த சிமெண்டு கற்கள் பெயர்ந்து சரிந்து விழுந்தது.

இப்பணிகள் நடைபெற்ற போது குளத்தின் கரையில் பதிக்கப்பட்டிருந்த சிமெண்டு கற்கள் பெயர்ந்து விழுந்ததால் கட்டுமானப் பணிகள் குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு செய்தனர்.

சரி செய்யப்படும்

இதுகுறித்து மன்னார்குடி நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன் கூறுகையில், கட்டுமான பணிகள் முடியாத நிலையில் திடீரென பெய்த கன மழையால் கற்கள் சரிந்துள்ளன.

இதை சரி செய்து மேலும் இது போன்று நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் பணிகளை கண்காணித்து விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்