விருந்துக்கு வந்த புதுப்பெண் மாயம்
அய்யலூர் அருகே விருந்துக்கு வந்த புதுப்பெண் மாயமானார்.
அய்யலூர் அருகே உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சங்கீதா (வயது 23). இவர், வேடசந்தூர் அருகே உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், பாலத்தோட்டத்தை சேர்ந்த பாண்டிதுரைக்கும் கடந்த 3-ந்தேதி திருமணம் நடந்தது.
இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி சங்கீதா, தனது கணவருடன் குறிஞ்சி நகரில் உள்ள தாய் வீட்டுக்கு விருந்துக்கு வந்தார். தாய் வீட்டில் இருந்த சங்கீதா, திடீரென மாயமாகி விட்டார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் சங்கீதா பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில், தனது மகளை கண்டுபிடித்து தருமாறு சங்கீதாவின் தாய் முத்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து மாயமான சங்கீதாவை தேடி வருகிறார். திருமணமாகி 5 நாட்களிலேயே, புதுப்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.