தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் பரபரப்பு

மேல்விஷாரம் நகராட்சியில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-26 18:07 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது. இதனை பார்த்ததும் உடனடியாக கொடியை கீழே இறக்கி சரி செய்து மீண்டும் ஏற்றினர். மேலும் தேசியக்கொடியை ஏற்றிவிட்டு அதற்குப் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சல்-குழப்பம் காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்