பலகையில் மாறப்படாத மாவட்டத்தின் பெயர்
பலகையில் மாறப்படாத மாவட்டத்தின் பெயர்ரை மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமிரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பெயர் பலகையில் ராணிப்பேட்டை மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்படாமல் இன்று வரை வேலூர் மாவட்டம் என்றே தொடர்கிறது. ஆரம்ப சுகாதாரத்தின் பெயர் பலகையில் மட்டும் மாவட்டத்தின் பெயர் மாற்றப்படாமல் இருப்பது ஏன்? என்பது குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாவட்டத்தின் பெயரை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேம்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.