பெண்ணிடம் பறித்த நகையை வீட்டின் அருகே வீசிச்சென்ற மர்ம நபர்

குளச்சலில் பெண்ணிடம் பறித்த நகையை வீட்டின் அருகே வீசி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-10-15 18:32 GMT

குளச்சல்:

குளச்சலில் பெண்ணிடம் பறித்த நகையை வீட்டின் அருகே வீசி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

நகை பறிப்பு

குளச்சல் அருகே உள்ள அஞ்சாலியை சேர்ந்தவர் சுஜின்குமார். இவரது மனைவி ராதிகா (வயது31). இவர்களது வீட்டின் அருகே கோணங்காட்டில் ஆலய திருவிழா நடந்து வருகிறது. ராதிகா நேற்று முன்தினம் ஆலய விழாவிற்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே வந்த ேபாது ஒரு மர்ம நபர் திடீரென ராதிகாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 13 பவுன் தாலி சங்கிலியை பறித்தார். உடனே, ராதிகா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் தப்பியோடி விட்டார்.

நகை மீட்பு

இதுகுறித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் ெகாடுக்கப்பட்டது. போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியை போலீசார் பார்வையிட்ட போது வீட்டின் அருகே பறிக்கப்பட்ட நகை கிடந்தது. அதை போலீசார் மீட்டு ராதிகாவிடம் ஒப்படைத்தனர். நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் போலீசார் வருவதை அறிந்து நள்ளிரவில் வீட்டின் அருகே வீசி விட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. அல்லது நகையை பறித்துவிட்டு தப்பி ஓடிய போது தவறி கீழே விழுந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்