ஒளிரும் விளக்கை அடித்து நொறுக்கிய மர்மநபர்கள்
ஒளிரும் விளக்கை மர்மநபர்கள் அடித்து நொறுக்கினர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே சூரியமணலில் திருச்சி புறவழிச்சாலை திருப்பத்தில், வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தும் வகையில் போக்குவரத்து போலீசாரால் கடந்த 3-ந் தேதி புதிதாக ஒளிரும் விளக்கு(சோலார் பிளிங்கர்) அமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த விளக்கை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த விளக்கை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.