ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது

நாங்குநேரியில் ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த தாய்-மகன் உயிர் தப்பினர்.

Update: 2023-04-15 20:05 GMT

நாங்குநேரி:

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் மனோகர் பாண்டி மனைவி மல்லிகா (வயது 40). இவர் நேற்று மதியம் தன்னுடைய மகனுடன் நாகர்கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றார். நாங்குநேரி சுங்கச்சாவடி அருகில் சென்றபோது, பாஸ்ட்ராக் ரீசார்ஜ் செய்வதற்காக நாற்கர சாலையோரமாக காரை நிறுத்தினர். அப்போது காரின் முன்பக்க என்ஜினில் இருந்து திடீரென்று புகை வெளியேறியது.

உடனே காரில் இருந்த மல்லிகாவும், மகனும் கீழே இறங்கினர். தொடர்ந்து சிறிதுநேரத்தில் கார் முழுவதும் மளமளவென்று தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து நாங்குநேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து சேதமடைநத்து. தீ விபத்துக்கான காரணம் குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்