மலைபாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
வாணியம்பாடி அருகே மலைபாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் பாலாற்றங்கரை ஓரத்தில் நேற்று மாலை மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை அந்தப்பகுதி வழியாக சென்ற பொது மக்கள் பார்த்தனர். அவர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வருவதற்குள் பொதுமக்களே மலைப்பாம்பை பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு 10 அடி நீளம் இருந்தது.
அதனை பொதுமக்கள் வனத்துறையினர் வந்ததும் அவர்களிடம் ஒப்படைத்தனர். அதனை வனத்துறையினர் காட்டுப் பகுதியில் விட்டனர்.