மலைப்பாம்பு பிடிபட்டது

படவேடு அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2022-06-29 13:03 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு சாமந்திபுரம் ஆற்றுப்பாலம் அருகில் மலைப்பாம்பு ஊர்ந்து வந்தது. அந்த வழியாக சென்றவர்கள் மலைப்பாம்பை பார்த்துவிட்டு அலறியடித்து ஓடினர்.

இதுகுறித்து அவர்கள் சந்தவாசல் வனத்துறைக்கு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களின் உதவியோடு 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்