விவசாயிகளை கடித்த குரங்கு பிடிபட்டது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயிகளை கடித்த குரங்கினை பிடித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மலை அடிவாரப் பகுதியில் குரங்கு ஒன்று அட்டகாசம் செய்து வந்தது. மேலும் அங்கு வேலைக்கு சென்ற விவசாயிகளை கடித்து வந்தது. இதுகுறித்து விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் வனப்பகுதியில் குரங்கு நடமாடும் பகுதியில் கூண்டு வைத்தனர். இந்த கூண்டில் குரங்கு மாட்டிக்கொண்டது. பின்னர் அந்த குரங்கை பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.