எரியோடு அருகே காங்கிரஸ் கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய கும்பல்

எரியோடு அருகே காங்கிரஸ் கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-17 16:36 GMT

எரியோடு அருகே ஆர்.புதுக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.பி.பில்லமநாயக்கன்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த கொடிக்கம்பத்தை ஒரு கும்பல் இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது வெள்ளைமடைபுதூரை சேர்ந்த வேலுப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல், தங்களது நிலத்தின் அருகில் காங்கிரஸ் கொடிக்கம்பம் இடையூறாக இருந்ததாக கூறி அதனை கடப்பாரையால் இடித்து சேதப்படுத்தியது தெரியவந்தது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த நிர்வாகி ராஜேந்திரன், அந்த கும்பலிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து குஜிலியம்பாறை வட்டார காங்கிரஸ் தலைவர் தர்மர் தலைமையிலான நிர்வாகிகள், எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஆர்.பி.பில்லமநாயக்கன்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்