போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த கும்பல்
வேடசந்தூர் அருகே போலீசாரை கண்டதும் பணம் வைத்து சூதாடிய கும்பல் ஓட்டம் பிடித்தது.
திண்டுக்கல்-கரூர் மாவட்ட எல்லையான, வேடசந்தூர் அருகே உள்ள ரெங்கமலை கணவாய் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பல், தலைதெறிக்க ஓட்டம் பிடித்து மலைப்பகுதியில் பதுங்கி கொண்டனர். இதில் சிலர் தங்களது மோட்டார் சைக்கிள், செருப்புகளை விட்டு தப்பி ஓடினர். இதற்கிடையே அவர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை அடிப்படையாக கொண்டு, அங்கு பணம் வைத்து சூதாடிய நபர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.