காணாமல் போன பெண், கொலை செய்யப்பட்டு கிணற்றில் பிணமாக கிடந்தார். துணியில் மூட்டையாக கட்டி வீசிய கொடூரம்
ரத்தினகிரி அருகே காணாமல்போன பெண், கொலைசெய்யப்பட்டு, துணியில் மூட்டையாக கட்டி கிணற்றில் வீசப்பட்டு கிடந்தார்.
ரத்தினகிரி அருகே காணாமல்போன பெண், கொலைசெய்யப்பட்டு, துணியில் மூட்டையாக கட்டி கிணற்றில் வீசப்பட்டு கிடந்தார்.
மனைவியை காணவில்ைல என புகார்
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் ராமு (வயது 40). இவரது மனைவி சரிதா (27). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி முதல் சரிதாவை காணவில்லை என கடந்த 1-ந் தேதி ரத்தினகிரி போலீசில் ராமு புகார் செய்துள்ளார்.
பின்னர் தனது சொந்த ஊரான கர்நாடக மாநிலம் கே.ஜி.எப்-க்கு ராமு சென்றுள்ளார். ராமு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை ராமுவின் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் ரத்தனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கொலைசெய்து கிணற்றில் வீச்சு
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த தரை கிணற்றில் இருந்து உடல் அழுகிய நாற்றம் வருவது கண்டுபிடிக்கப்பட்டது. கிணற்றை ஆய்வு செய்த போது ஒரு துணி மூட்டை கிணற்றில் கிடந்தது தெரியவந்தது.
அதனை வெளியே எடுத்து சோதனை செய்தனர். அப்போது அழுகிய நிலையில் சரிதாவின் உடல் இருந்தது. அவரை கொலை செய்து துணியில் மூட்டையாக கட்டி கிணற்றுக்கில் போட்டுள்ளனர். மீட்ப்பட்ட சரிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
சரிதாவை அவரது கணவரே கொலை செய்து கிணற்றில் மூட்டையாக கட்டி போட்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.