கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் கொரோனா பரவல் இல்லை அமைச்சர் பேட்டி

கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் கொரோனா பரவல் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2022-07-07 23:10 GMT

கோவை,

அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தை கடத்தப்படுவதை தடுக்க அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு திட்ட மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் 22 என்ற எண்ணிக்கையில் இருந்து 2,700 என்று உயர்ந்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம்பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 5 சதவீதம் பேர் தான் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது பரவும் கொரோனா வகை வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

கட்டுப்பாடுகள் தேவையில்லை

தினமும் எடுக்கப்படும் பரிசோதனையில் 10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு இருந்தாலோ, 40 சதவீதத்துக்கும் மேல் ஆஸ்பத்திரிகளில் தொற்று காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டால்தான் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ஆனால் தற்போது அதுபோன்ற நிலை இல்லை. எனவே கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கொரோனா பரவலும் இல்லை.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கட்டிடங்கள் கட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டு அது முடிவடையும் நிலையில் உள்ளது. டெண்டர் விடப்பட்டு 6 மாதத்துக்குள் கட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்