நெய்வேலி அருகே மாங்காய் வியாபாரி அடித்துக்கொலை போலீசார் விசாரணை

நெய்வேலி அருகே மாங்காய் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-10-23 18:46 GMT

நெய்வேலி 

ரத்த காயங்களுடன்...

நெய்வேலி அருகே உள்ள கீழ் வடக்குத்து வடக்கு தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தசாமி மகன் ராமகிருஷ்ணன் (வயது 50). மாங்காய் வியாபாரியான இவர் நேற்று மாலை வடக்குத்து கிராமத்தில் இருந்து கீழூர் செல்லும் சாலையோர வயலில் உள்ள மோட்டார் கொட்டகை அருகே பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொழில் போட்டியா?

மர்மநபர்கள் தாக்கியதில் ராமகிருஷ்ணன் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, முன்விரோத தகராறு அல்லது தொழில் போட்டி காரணமாக யாரேனும் அவரை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்